News
அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அய்யா வைகுண்டரின் 188வது பிறந்தநாள் விழா
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 188-ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அவரது பிறந்த ஊரில் அதிகாலை 2 மணிக்கு பிறந்தநாள் விழா தொடங்கியதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ‘அகிலத்திரட்டு’ என்ற புனித நூலிலிருந்து வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற சடங்குகள் செய்யப்பட்டன.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது.
17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 17-வது நாள் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திரு ஏடு வாசிப்பு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விஜயநகரி ராஜபழம், தங்கேஸ்வரி ஆகியோர் திருஏட்டினை வாசிக்கின்றனர். இதையொட்டி மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. தொடர்ந்து 17 நாட்கள் மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.
விழாவில் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி, மும்பை அய்யாவு, வென்னிமல், மார்த்தாண்டம் செல்லையா நாடார், மகாராஜன் ஆசாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 15-வது நாள் திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 17-வது நாள் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்த விழா 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. 18-ந்தேதி திருஏடு வாசிப்பு நடக்கிறது. மேலும் படிக்க மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை நெட்டியான் விளை அய்யா வைகுண்டர் திருப்பதி கோவிலில் 191-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 73-வது ஆண்டு திருஏடு வாசிப்பு விழாவும் நேற்று தொடங்கியது. இந்த விழா 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், மாலை 5 மணிக்கு பணிவிடையும், திருஏடு வாசிப்பும், இரவு 9 மணிக்கு உகப்படிப்பும், 9.30 மணிக்கு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டியும், இரவு 10 மணிக்கு வைகுண்டர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், அன்னதானமும் நடைபெறுகிறது. 18-ந் தேதி மாலை திருஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 9 மணிக்கு பரிசு வழங்குதலும், பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 4 மணிக்கு திருஏடு வாசிப்பும், பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடையும் நடக்கிறது. 20-ந் தேதி காலை மற்றும் மாலை பணிவிடை, உகப்படிப்பு, 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது. இந்த வாகனம் மாமூட்டுக்கடை, கீழ்விளை, இட விளாகம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில், பங்காணிவிளை வழியாக கோவிலை வந்து அடைகிறது. இரவு 9 மணிக்கு பள்ளியுணர்த்தல், 9.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
நெட்டியான்விளை அய்யா வைகுண்டர் திருப்பதியில் திருஏடு வாசிப்பு விழா
அய்யா சிவ…சிவ.. அரகர…அரகரா… என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பை நோக்கி ஊர்வலமாக சென்றனர். காவி உடை அணிந்த அவர்கள் கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி சென்றனர். சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர். நாகராஜா கோவிலில் இருந்து கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தன்காடு வழியாக சாமி தோப்புக்கு ஊர்வலம் சென்றது. ஊர்வலம் சென்ற பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வெற்றிலை,பாக்கு, பழம் என சுருள் வைத்து பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஊர்வ லத்தில் பங்கேற்றவர்க ளுக்கு வழிநெடுக மோர், குளிர்பானம், பானகரம் வழங்கப்பட்டன. சாமிதோப்பு தலைமை பதியை ஊர்வலம் சென்ற டைந்ததும் அங்கு அய்யா வுக்கு பணிவிடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் தலைமைபதியில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் சாமிதோப்பில் திரண்டனர். இதனால் திரும்பிய இடமெல்லாம் மக்கள் தலைகளே காணப்ப ட்டன. நேற்று இரவே ஆயிரக்க ணக்கானோர் தரிசனத்திற்கு குவிந்ததால், வடக்குவாசல் பள்ளியறை பதி மற்றும் 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திரு ந்தனர்.ஒருவர் தரிசனம் பெற சுமார் 2 மணி நேரம் வரை ஆனது. இன்று இரவு சாமிதோப்பு கலையரங்கில் அய்யாவழி மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஈத்தங்காடு-சாமிதோப்பு சாலையில் இயக்கப்படும் பஸ் போக்குவரத்து இன்று காலை முதல் மாற்றுப்பாதை யில் இயக்கப்பட்டது. மேலும் பதி வளாகப் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாமிதோப்பு பதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள்,நிழல் தாங்கல்களிலும் இன்று அய்யா அவதார தின சிறப்பு வழிபாடுகள் நடந்தன. உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வாகன பவனியும் நடந்தது.
நெட்டியான்விளை அய்யா வைகுண்டர் திருப்பதியில் திருஏடு வாசிப்பு விழா
சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர். மேலும் படிக்க அய்யா வைகுண்ட சாமி யின் 191-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அய்யா வழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது. அய்யாவின் அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வாகன பேரணி நேற்று தொடங்கியது. இந்த பேரணி இரவில் நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலை வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடை பெற்றது. மாநாட்டுக்கு பாலஜனாதிபதி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.முன்னதாக மாலையில் சாமி தோப்பு தலைமை பதியில் இருந்து மகாதீபம் கொண்டு வரப்பட்டு ஆதலவிளை வைகுண்ட மாமலையில் ஏற்றப்பட்டது. இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்கியது. இதில் பால ஜனாதிபதி, விஜய் வசந்த் எம்.பி., உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் நேற்று இரவே நாகராஜா கோவில் திடலில் குவிந்திருந்தனர். அவர்கள் இன்று காலை